உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பல்வேறு வழக்கில் தொடர்புடைய 9 பேர் கைது

பல்வேறு வழக்கில் தொடர்புடைய 9 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வந்த வாகன திருட்டு, வீடு புகுந்து நகை திருடியது, நகை பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., ரவிக்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்க்கப்பட்டது. விசாரணையில், 20 வழக்குகளில் தொடர்புடைய கடலூர் அரிசிபெரியகுப்பம் கன்னிமான நகர் வீரப்பன் மகன் கிச்சான் (31), திருச்சி மேலபுதூர் கெம்ஸ்டவுன் கலியபெருமாள் மகன் ராஜகோபால் (36) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 75 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டது. ஏழு டூவீலர்கள் திருடிய வல்லம் காளவாய் மேடு மாரியப்பன் மகன் செல்வராஜ் (30) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஏழு டூவீலர்கள் மீட்கப்பட்டது. மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய ஒரத்தநாடு தும்பத்திக்கோட்டையை சேர்ந்த மணிவேல் மகன் கலைச்செல்வன் (27), அம்மாபேட்டை அடுத்த செண்பகபுரம் அன்பழகன் மகன் பிரகாஷ் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பவுன் நகை மீட்கப்பட்டது. வல்லத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ரெட்டிப்பாளையம் இந்திராநகர் மாரியப்பன் மகன் அங்காலன் (25), அய்யம்பேட்டையில் வீடு புகுந்து செயின் பறித்த செருகுடி குப்புசாமி மகன் பொன்னுசாமி (35) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 13 பவுன் நகை கைப்பற்றப்பட்டது.பட்டுக்கோட்டையில்130 பவுன் நகை திருடிய பலே கொள்ளையன் கேரளாவை சேர்ந்த ரெங்கன் நாயர் மகன் சேட்டாமணி (42) கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 130 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. தோகூரில் கொலை செய்யப்பட்ட திருச்சியை சேர்ந்த முருகேசன் கொலை வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த பாலாஜி (29) கைது செய்யப்பட்டார். மேலும் பிரபாகரன், கேசவன் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை தஞ்சை சரக டி.ஐ.ஜி., ரவிக்குமார், எஸ்.பி., அணில்குமார் கிரி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை