| ADDED : செப் 09, 2011 01:58 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹாலில் நேற்று துவங்கிய கொலுப்பொம்மை கண்காட்சி, அக்., 4ம் தேதி வரை நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் கைவினைப் பொருட்கள் கூட்டுறவு மையம் சார்பில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹாலில், நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு கொலுப்பொம்மை கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கரன் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விஷ்ணுவின் தசாவதாரக் கோலங்கள் மற்றும் திருமணத்தை தத்ரூபமாக காட்டும் கல்யாண மேடை காட்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து அக்., நான்காம் தேதி வரை (விடுமுறை நாட்கள் உட்பட), தினமும் காலை 10 மணி முதல் 7.30 மணி வரை கண்காட்சி நடக்கவிருக்கிறது.