உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / டந்தை நகராட்சி தி.மு.க., வேட்பாளர்

டந்தை நகராட்சி தி.மு.க., வேட்பாளர்

கும்பகோணம்: கும்பகோணம் நகர்மன்ற தலைவர் தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக தி.மு.க.,வின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், நகர தி.மு.க., பொருளாளரும் ஆகிய ராசாராமன் மருமகள் புவனேஸ்வரி(37) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவரின் கணவர் பாபு என்கிற நரசிம்மன் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆகாஷ், சத்யநாராயணா எனும் இரு மகன்கள் உள்ளனர். தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த இவர் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தல் மற்றும் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணியாற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்