உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மன்னார்குடியில் 40 ஆண்டுக்கு பின் ரயில் சேவை துவக்கம்

மன்னார்குடியில் 40 ஆண்டுக்கு பின் ரயில் சேவை துவக்கம்

மன்னார்குடி: மன்னார்குடியில் 40 ஆண்டுக்கு பின் ரயில் சேவை துவங்கியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின், மீண்டும் ரயில் சேவை தொடர பல்வேறு குழுவினர் மற்றும் மக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது, 135 கோடி ரூபாய் மதிப்பில் மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, 27ம் தேதி முதல் மன்னார்குடியிலிருந்து சென்னை செல்ல எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. மன்னார்குடி மற்றும் சுற்றவட்டார பொதுமக்களுக்கும், பாமணி உர ஆலையின் போக்குவரத்துக்கும், இந்த ரயில் சேவை பெரிதும் பெரிதும் உதவியாக இருக்கும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த ரயில்வே நிலைக்குழுத் தலைவர் பாலுவுக்கு, மன்னார்குடி ரயில்வே பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மன்னார்குடி ரயில்வே குடும்ப உறுப்பினரும், ரயில்வே நுகர்வோர் குழுத்தலைவரும், முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான சேப்பையனும் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ