மேலும் செய்திகள்
தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி
04-Jan-2025
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வலையபேட்டையைச் சேர்ந்தவர் பிரேம் குமார், 24, வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவர் செங்கல்சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு, தன் மொபைல் போனை பார்த்தபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Jan-2025