கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த உத்திராபதியை, அவரது சகோதரர் சின்னப்பா, 2018ல், சொத்து பிரச்னையில் வெட்டிக்கொலை செய்தார். சின்னப்பா மற்றும் கொலைக்கு துாண்டுதலாக இருந்த அவரின் இன்னொரு அண்ணன் ராமலிங்கம் மனைவி பிரேமாவதியை, போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கு, பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் முதல் குற்றவாளியான சின்னப்பா கொரோனாவால் இறந்தார். இரண்டாம் எதிரியான பிரேமாவதி, முதல் நபராக சேர்க்கப்பட்டார்.நீதிபதி மணி நேற்று பிரேமாவதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.