ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய போதை நபர் கைது
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே , ஆணைக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஞான சேகர், 31. நேற்று முன்தினம் மாலை, அவர், கும்பகோணம் அருகே, மாதுள ம்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு சென்ற போது, மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக, கேட் மூடப்பட்டிருந்தது. அ ங்கு கேட் கீப்பராக பணியில் இருந்த, தஞ்சாவூர், ரயில்வே காலனியை சேர்ந்த குமரன், 45, என்பவரிடம், போதையில் இருந்த ஞானசேகர், கேட்டை திறக்க கூறி தகராறு செய்தார். மேலும், தகாத வார்த்தையால் திட்டி, குமரனை தாக்கி னார். இது குறித்த புகார்படி, கும்பகோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, ஞானசேகரை நேற்று கைது செய்தனர்.