உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பேச மறுத்த நண்பனுக்கு அடி தடுத்த அவரது தந்தை கொலை

பேச மறுத்த நண்பனுக்கு அடி தடுத்த அவரது தந்தை கொலை

தஞ்சாவூர்: பேச மறுத்த நண்பனை தாக்கிய நபர், அதை தடுக்க முயன்ற நண்பனின் தந்தையை கொலை செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம், நாயக்கர் பேட்டையை சேர்ந்தவர் சம்பத்குமார், 58; இவரது மகன் பூவரசன், 23. நேற்று அதிகாலை, குடி போதையில், சம்பத்குமார் வீட்டுக்கு சென்ற சரவணன், 25, என்பவர், மண் வெட்டியால் பூவரசனை அடித்தார்.இதில், பூவரசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தடுக்க முயன்ற சம்பத்குமாரையும், சரவணன் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த சம்பத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். கபிஸ்தலம் போலீசார், சரவணனை கைது செய்தனர். செங்கல் சூளையில் வேலைக்கு சென்ற பூவரசன், சரவணன் இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம். இரு ஆண்டுகளுக்கு மேலாக, மது குடிப்பதை நிறுத்தி விட்ட பூவரசன், சரவணனுடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், நேற்று அவரது வீட்டுக்கு சென்று பூவரசனை தாக்கியுள்ளார். தடுக்க முயன்றதால், அவரது தந்தையை கொலை செய்தது, விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை