உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டு

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டு

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 71; விவசாயி. இவர், தன் மகள் திருமணத்திற்காக மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ், திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் பெற விண்ணப்பிக்க முடிவு செய்தார்.அதற்காக, 2017 மே 30ம் தேதி, ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊர்நல அலுவலராக பணியாற்றி வந்த, அஞ்சலி தேவி, 65, என்பவரிடம் மனு அளித்தார். மனு குறித்து ஒரு மாதங்களான நிலையில், எந்த தகவலும் வராததால், 2017 ஜூன் 28ம் தேதி, அஞ்சலி தேவியிடம் விசாரித்தார். அப்போது, அஞ்சலிதேவி, ராமச்சந்திரனிடம் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். புகாரின்படி, அஞ்சலிதேவி லஞ்சம் வாங்கியபோது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நேற்று அஞ்சலி தேவிக்கு 3 ஆண்டு சிறை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழ் நாட்டு அறிவாளி
பிப் 15, 2025 12:56

எல்லாருக்கும் பணம் தேவை படுவதால் பணம் கேட்கிறார்கள். இனி தாய்லந்து பெண்களை இந்தியாவில் வேலைக்கு வைத்தால் ஒரே ஜாலியா இருக்கும். ரெண்டு வேலை செய்யலாம்


புதிய வீடியோ