உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குடமுருட்டி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்: நீர்நிலை மாசு ஏற்பாடும் அபாயம்  

குடமுருட்டி ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்: நீர்நிலை மாசு ஏற்பாடும் அபாயம்  

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூர் பஞ்சாயத்தில், சேகரிக்கப்படும் குப்பையை, குடமுருட்டி ஆற்றின் தென்கரையில், பஞ்சாயத்து நிர்வாகம் கொட்டி வருகிறது. இதனால், நீர் நிலை மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசுவதனால், ஆற்றின் கரைகளில் உள்ள வீடுகளில் உணவருந்த கூட முடியாத நிலையை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால், உறவினர்கள் கூட வீட்டிற்கு வர அச்சப்படுகின்றனர்.மேலும், ஆற்றங்கரைகளில் உள்ள குப்பை, நீரில் கலந்து விடுவதால், அந்த நீரில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, நீரை பயன்படுத்தும் போது, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதால் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வருவதாக பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.இது குறித்து நீர்நிலை பாதுகாப்பு சங்க தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:திருவையாறு ஐந்து ஆறுகளை கொண்ட பெருமை மிக்க ஊர். ஆனால், இன்றைக்கு கண்டியூர் போல, பல்வேறு பஞ்சாயத்துகளில், சேகரிக்கப்படும் குப்பையை, காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆறுகளின் கரையோரங்களில் தான் கொட்டப்படுகிறது.இது ஆற்றின் அருகே உள்ள பகுதிகள் மட்டும் பாதிப்பை சந்திக்கவில்லை. இந்த ஆறு பயணிக்கும் அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை மாசு அடைகிறது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.கேரளா மருத்துவக்கழிவுகள் விவகாரம் போல, இதுவும் பாதிப்பை உருவாக்கும் பிரச்னை தான்.திருவையாறு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்கள் முழுதும் இந்நிலை தான் உள்ளது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ