உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு சுவாமிமலையில் தயாரான சிலைகள்

கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு சுவாமிமலையில் தயாரான சிலைகள்

தஞ்சாவூர்:உத்தரகண்ட் மாநிலம், கிஷ்கிந்தா சமஸ்தானம், ஸ்வர்ணஹம்பியில் உள்ள ஸ்ரீ ஹனுமத் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், 2021ல், ஹிந்துக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில், 12 அடி உயர கருங்கல் ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.அங்கு நித்யபூஜை மேற்கொள்ள, பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட ஆதிசங்கரர் சிலையை பிரதிஷ்டை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான சிலை வடிவமைக்கும் பணி, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே திம்மக்குடியில் உள்ள, 'கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ்' சிற்பக்கூடத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இதன்படி, கேதார்நாத், பத்ரிநாத், உத்தரமானிய ஜோதிர்மத், பவிஸ்ய படாரி ஆகிய புனித ஸ்தலங்களில் பிரதிஷ்டை செய்யும் வகையில்,ஸ்தபதி வரதராஜ் தலைமையிலான, 15 பேர் கொண்ட சிற்பிகள் குழுவினர், 40 நாட்களில், பஞ்சலோகத்தாலான, ஒன்றரை அடி உயரமுள்ள, நான்கு ஆதிசங்கரர் சிலைகளை வடிவமைத்தனர். தலா, 37 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலைகள், மூன்று நாட்களுக்கு முன் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.சிற்பக்கூட தலைமை ஸ்தபதி வரதராஜ் கூறியதாவது:ஆதிசங்கரரின் 2,532வது ஜெயந்தி விழா நடைபெறும் வைகாச சுக்லபட்ச பஞ்சமி தினமான நேற்று முன்தினம் கேதார்நாத்தில், நாங்கள் வடிவமைத்த பஞ்சலோக உத்சவர் ஆதிசங்கரர் சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று மற்றும் இன்று பத்ரிநாத்திலும், 5ம் தேதி உத்தரமானிய ஜோதிர்மத்திலும், 6ம் தேதி பவிஸ்ய படாரியில் ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ