மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ
19-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே முட்டக்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 30. இவரது உறவினரான மணிகண்டன் என்பவருக்கு, கடந்த, 2016ல், இடையநல்லுார் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், 35, தங்கை பிரியதர்ஷினியுடன் திருமணமானது. கடந்த 2018ல் மணிகண்டன் குடும்ப பிரச்னை காரணமாக, தற்கொலை செய்து கொண்டார். இதனால், ராஜசேகருக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. மேலும், கார்த்திகேயனிடம், தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள ராஜசேகர் வற்புறுத்தினார். கார்த்திகேயன் மறுத்ததால், ஆத்திரத்தில் கார்த்திகேயனை, 2019ல் தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜசேகர் வெட்டி கொலை செய்தார். திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா நேற்று அளித்த தீர்ப்பில், ராஜசேகருக்கு ஆயுள் சிறை தண்டனையும், 8,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025
19-Sep-2025