சொத்து கிடைக்காத கோபத்தில் சித்தியை கொன்றவருக்கு வலை
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிகாடு பகுதியை சேர்ந்தவர் சுசீலா, 55. இவர் நேற்று காலை, முதல்சேரி கிராமத்திற்கு சென்று இருந்தார்.அப்போது, சுசீலா அக்கா கண்ணகியின் மகனான பொன்னவராயன் கோட்டை சேர்ந்த அன்பழகன், 30, என்பவர், சுசீலாவை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொன்று விட்டு, தப்பினார். தகவலறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், சுசீலாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.விசாரணையில் போலீசார் கூறியதாவது:கொலையாளி அன்பழகன், ஐவுளி கடை நடத்தி வருகிறார். இவருக்கு அறிவழகன், மதியழகன் என்ற இரண்டு தம்பிகள் உள்ளனர். அக்கா கண்ணகி பெயரில் உள்ள சொத்துக்களை மதியழகன், அறிவழகன் பெயரில் எழுதி வைக்கவும், அன்பழகனுக்கு சொத்தில் பங்கு ஏதும் தராமல் சுசீலா தடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த அன்பழகன், தனக்கு சொத்து வருவதை தடுத்த வரும் தனது சித்தி சுசீலாவை, கொலை செய்ய திட்டமிட்டார். சுசீலா நேற்று தனியாக புதுமனை புகுவிழாவுக்கு சென்று இருப்பதை அறிந்த அவர், புதுமனை புகுவிழாவுக்கு செல்வது போல சென்று, சுசீலாவை கொலை செய்தார்.இவ்வாறு போலீசார் கூறினர். தலைமறைவான அன்பழகனை தேடி வருகின்றனர்.