மேலும் செய்திகள்
பைக் விபத்தில் ஒருவர் பலி
24-Dec-2024
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே அருமலைக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த அருணாசலம், 60. இவர் சில நாட்களுக்கு முன் அப்பகுதியிலுள்ள வயல் வரப்பில் ஆடு, மாடுகளை மேய விட்டார். இது தொடர்பாக அருணாசலத்துக்கும், அதே ஊரிலுள்ள சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அருணாசலம் சைக்கிளில் அருமலைக்கோட்டை வடசேரி வாய்க்கால் மேல பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே டூ - வீலரில் வந்த விவேக், 28, தகராறில் ஈடுபட்டார். இதில், விவேக் தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து, அருணாசலத்தின் கையில் அடித்து உடைத்து, அவரது தொண்டையில் குத்தினார்.இதனால், பலத்த காயமடைந்த அருணாசலம், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் நேற்று விவேக்கை கைது செய்தனர்.
24-Dec-2024