மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ
19-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் நாமக்கல்லில் இருவேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:கொரோனாவிற்கு பின், அரசு பள்ளி, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கல்லுாரியில் மட்டுமே, 35 சதவீதம் மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லுாரி நேரங்களில், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகம் முழுதும், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்கின்றனர். மலைப்பகுதிகளில் டவுன் பஸ்கள் இதுவரை இயக்கவில்லை. முதல்வரிடம் இந்த கோரிக்கையை தெரிவித்து, அவர் தமிழகம் முழுதும் மலைப்பகுதிகளில் இயங்கும் பஸ்களை, அரசு டவுன் பஸ்களாக இயக்கவும், மகளிர் இலவச பயணம் செய்வதற்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த சேவையை முதலில் ஊட்டியில் பிப்., 25ம் தேதி துவக்கி வைக்கிறோம். மற்ற பகுதிகளில் படிப்படியாக நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணம் சுற்று பகுதிகளில் உள்ள நவகிரஹ கோவில்களில், ஒரே நாளில் தரிசிக்க சிறப்பு பஸ் சேவையை, தமிழக அரசு போக்குவரத்து கழகம் துவக்கி உள்ளது. இந்த சேவை, வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு மீண்டும் கும்பகோணம் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு போக்குவரத்துத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த மாதம் முழுதும் பயணியர் பதிவு செய்துள்ளனர். ஒருவருக்கு 750 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025
19-Sep-2025