மேலும் செய்திகள்
வயிற்று வலி தாளாமல் விவசாயி தற்கொலை
23-Aug-2025
தஞ்சாவூர்:ஒரத்தநாட்டில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, கர்ப்பமாக்கிய தொழிலாளி 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், செம்மண்குட்டையைச் சேர்ந்தவர் அன்பழகன், 31; கூலி தொழிலாளி. இவர், ஒரத்தநாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். சிறுமியை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். பரிசோதனையில், சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அன்பழகன் காரணம் என தெரிய வந்ததும், சிறுமியின் பெற்றோர், சைல்டுலைன் உதவி எண்ணில் புகார் அளித்தனர். சமூக நலத்துறை அதிகாரிகள் ஒரத்தநாடு மகளிர் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, அன்பழகனை நேற்று போக்சோவில் போலீசார் கைது செய்தனர். அன்பழகன் மனைவி 8 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
23-Aug-2025