வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவலட்சமான அரசாங்கத்தில் இது ஒரு பெரிய விசயமா ?
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சென்ற அரசு பஸ்சை நிறுத்தி அதில் இருந்த பயணியரை இறக்கி விட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.தஞ்சாவூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த ஒரு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பயணியரை ஏற்றிச்சென்ற அரசு டவுன் பஸ்சை நிறுத்தினர். அதில் இருந்த பயணியரை பாதி வழியில் இறக்கி விட்ட போலீசார் கைது செய்த ஆசிரியர்களை அதில் ஏற்றி அனுப்பினர். போலீசார் மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாததால் பஸ்சில் இருந்து பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பயணியர் டிக்கெட் எடுத்த இடத்துக்கு செல்ல முடியாமல் வெயிலில் திகைத்து நின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல போதுமான வாகனங்களை ஏற்பாடு செய்யாமல் பயணியருடன் வந்த அரசு டவுன் பஸ்சை நிறுத்தி, பயணியரை இறக்கி விட்ட போலீசார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
அவலட்சமான அரசாங்கத்தில் இது ஒரு பெரிய விசயமா ?