உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ரயிலில் தவறவிட்ட நகை பையை உரியோரிடம் ஒப்படைத்த போலீஸ்

ரயிலில் தவறவிட்ட நகை பையை உரியோரிடம் ஒப்படைத்த போலீஸ்

கும்பகோணம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்துார் பகுதியை சேர்ந்த சங்கர். இவரது மனைவி சக்திகணபதி. இருவரும் நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், மதுரை செல்வதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தனர்.அப்போது, தாம்பரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் ஜன்சதாப்தி ரயில் வந்தது. இந்த ரயில் ராமேஸ்வரம் ரயில் இல்லை என்பதை தாமதமாக அறிந்து சங்கர் மற்றும் அவரது மனைவி அவசரமாக ரயிலில் இருந்து இறங்கினர். அப்போது தான் அவர்கள் எடுத்து வந்த பையை ரயிலில் தவற விட்டனர். உடனே, சங்கர் மனைவி சக்திகணபதி, பையில், 33 கிராம் தங்க நகை, பணம் இருப்பதாக கும்பகோணம் ரயில்வே போலீசாரிடம் கூறினார். அவர்கள் உடனே பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். அந்த ரயில் பாபநாசம் சென்றதும், ரயிலில் சக்திகணபதி வைத்து இருந்த பையை மீட்டு, கும்பகோணம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார், அந்த தம்பதியிடம் பையை கொடுத்து அனுப்பினர். ரயில்வே போலீசாருக்கு சங்கர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை