உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குடிக்க மாட்டோம் என குலதெய்வம் மீது சத்தியம் செய்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள்

குடிக்க மாட்டோம் என குலதெய்வம் மீது சத்தியம் செய்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள்

தஞ்சாவூர்:'குலத்தெய்வம் மீது ஆணையாக மது அருந்தி விட்டு ஷேர் ஆட்டோவை இயக்க மாட்டோம்' என,ஷேர் ஆட்டோ டிரைவர்கள் உறுதிமொழி ஏற்றனர். தஞ்சாவூர், போக்குவரத்து போலீசார் சார்பில், மருத்துவக்கல்லுாரி, வல்லம்,, நாஞ்சிக்கோட்டை சாலை பகுதிகளில் இயக்கப்படும், 51 ஷேர் ஆட்டோக்களின் டிரைவர்கள், உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில், ஷேர் ஆட்டோ டிரைவர்கள், 'எங்களின் குலதெய்வத்தின் மீது ஆணையாக, மது அருந்தி விட்டு, ஷேர் ஆட்டோக்களை இயக்க மாட்டோம்' என சத்தியம் செய்து, உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேசியதாவது: பணியில் இருக்கும் போது மது அருந்தாதீர். இதனால், பாதிப்பு உங்களுக்கு மட்டுமில்லை. உங்களை நம்பி ஷேர் ஆட்டோவில் ஏறும் பயணியருக்கும் தான். நியாயமான உங்கள் கோரிக்கைகளை கேளுங்கள்; செய்து தர தயாராக உள்ளேன். ஆனால், நீங்கள் அதற்கு முன்பு உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மது போதையில் வாகனங்களை இயக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை