6 ஆடுகளை கடித்து குதறிய தெருநாய்கள்
தஞ்சாவூர்: கொட்டகையில் புகுந்த தெருநாய்கள் கடித்து குதறியதில், 6 ஆடுகள் இறந்தன. தஞ்சாவூர் அருகே, ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 41; விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் ஆடுகள் கட்டி வைப்பது வழக்கம். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, ஆடுகளின் சத்தம் கேட்டு சரவணன், அவரது குடும்பத்தினர் பார்த்தனர். 8க்கும் மேற்பட்ட தெருநாய்கள், ஆடுகளை கடித்து குதறியதில், ஆறு ஆடுகள் இறந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த சரவணன், அவரது குடும்பத்தினர் வேதனையடைந்தனர். கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் தெருநாய் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பள்ளி குழந்தைகள், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள், வாகன ஓட்டிகளை துரத்தி வருவதால், மிகுந்த அச்சத்துடன் உள்ளோம். பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.