உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  தி.மு.க., நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

 தி.மு.க., நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

தஞ்சாவூர்: விபச்சார வழக்கு தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ராஜா ரகுபதி, 48, கட்சியில் இருந்து, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் நடத்தி வந்த 'பை ஸ்டார்' என்ற லாட்ஜில், விபச்சாரம் நடப்பதாக எழுந்த புகாரில், செப்., 20ல் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வடமாநில பெண்கள் உட்பட ஆறு பெண்களை மீட்டனர். இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்த நிலையில், ராஜா ரகுபதி மீது, மேற்கு போலீசார், விபச்சாரம் சார்ந்த, ஏழு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கட்சி தலைமை அவரை, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ