உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / டூவீலர் மோதி ஒருவர் சாவு

டூவீலர் மோதி ஒருவர் சாவு

கும்பகோணம்: ஆடுதுறை அருகே வைகல் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் விவசாயி சண்முகம்(65). இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பழியஞ்சியநல்லூர் கிராமத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது, ஹோண்டா டூவீலரில் வந்தவர் நடந்து சென்ற சண்முகத்தின் பின்புறமாக மோதிவிட்டார். இதில் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சண்முகத்தை உடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் இறந்தார். திருநீலக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை