உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குழந்தைகள் திரைப்பட விழா தஞ்சை கலெக்டர் ஆலோசனை

குழந்தைகள் திரைப்பட விழா தஞ்சை கலெக்டர் ஆலோசனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் குழந்தைகள் திரைப்பட விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை தஞ்சாவூரில் உள்ள விஜயா , ராஜராஜன், ஜுபிடர், அருள், ராஜா கலையரங்கம், சாந்தி, திருவள்ளுவர், அட்லேப்ஸ், பர்வின் ஆகிய தியேட்டர்களிலும், 28ம் தேதி முதல் 30 தேதி வரை கும்பகோணத்தில் உள்ள வாசு, செல்வம், பர்னிகா, காசி தியேட்டர்களிலும், அதே நாட்களில் பட்டுக்கோட்டையில் நீலா, அன்னபூர்ணா, அருண், முருகையா, ராஜாமணி தியேட்டர்களிலும் குழந்தைகள் திரைப்பட விழாவை முன்னிட்டு திரைப்படங்கள் காண்பிக்கப்பட உள்ளது.சுந்தர காண்ட மகாபாரதம், தன்னம்பிக்கை, செல்லம், ஆயிஷா, முதலில் நீங்கள், பால்யமேதை, வெற்றி பாதை ஆகியே திரைப்படங்கள் குழந்தைகள் திரைப்பட சங்கம் சார்பில் காண்பிக்கப்பட உள்ளது. தியேட்டர்களின் இருக்கைகளின் அளவுக்கேற்ப மாணவ, மாணவியர் கலந்துகொண்டு திரைப்படங்களை கண்டு பயன்பெற பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் பேசினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது ஆரிப் சாகிப், முதன்மை கல்வி அலுவலர் சாந்தமூர்த்தி, இந்திய குழுந்தைகள் திரைப்பட சங்க உதவி விநியோக அலுவலர் சார்லஸ் டி சவுசா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ