உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகளை உற்பத்தி செய்து அளவுக்கு தேங்கி கழிவு நீர்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  நோயாளிகளை உற்பத்தி செய்து அளவுக்கு தேங்கி கழிவு நீர்

தஞ்சாவூர்:தஞ்சாவூர், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உள்ளூர் மட்டுமின்றி சுமார் 5 மாவட்ட மக்கள் வந்துச்செல்லுகின்றனர். இங்கு பல்வேறு அதிநவீன சிகிச்சைக்கான பிரிவுகள் புதியதாக துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், அவசர சிகிச்சை பிரிவுக்கு பின்புறம் 40 மற்றும் 42 வார்டுக்கு முன்பாக, கடந்த நாட்களுக்கு மேலாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தேங்கியுள்ள பகுதி வழியாக தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள், வார்டு பகுதிளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த பாதையை நோயாளிகள், டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஸ்கேன் மையமும் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுகள் உற்பத்தி அதிகமாகியுள்ளதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், நோயாளிகளும், டாக்டர்களுக்கும் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவமனையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: அனைத்து வார்டுகளிலும், நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய கழிவுகள், குழாய்கள் வெளியே கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான இணைக்கப்பட்ட தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது குறித்து மேலிடத்தில் கூறியும், அவர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தினால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே தொற்றுநோய் பரவுதற்கு முன்பாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து நோயாளிகள் கூறியதாவது: சுத்தம், சுகாதாரம் பேணி காக்க வேண்டிய மருத்துவமனையில் திறந்தவெளியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. நோய்களை தீர்க்க மருத்துவமனைக்கு வந்தால், புதிதாக நோய்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சமாக உள்ளது. எங்களின் உறவினர்கள் நோயாளிகளான எங்களை பார்க்கக்கூட வருவதற்கு அருவருப்பு படுகிறார்கள். நாங்கள் மட்டுமல்லாமல், டாக்டர்களும் துார்நாற்றத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு தான் செல்கிறார்கள் இவ்வாறு கூறினார். பாக்ஸ்; பம்புசெட்டை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீர்மருத்துவமனை பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள, குடிநீர் பம்பசெட்டை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீர் பம்புசெட்டில் இறங்கினால், தண்ணீரை பயன்படுத்தும்போது வேறு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே கழிவுநீரை அகற்ற வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஜூன் 09, 2025 09:57

மழை நீர் தேக்கம் இல்லையே இது கழிவு நீர்தானே என்று பெருமைப்படவேண்டுமா தமிழகம் அல்லது அரசதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் கொடுத்திருந்தால் எப்பொழுதோ சரிபார்த்து இருப்பார்களே என்று ஆலோசனை கூறவேண்டுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை