உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / செங்குந்தர் சேவை மைய முப்பெரும் விழா

செங்குந்தர் சேவை மைய முப்பெரும் விழா

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் செங்குந்தர் திருமண சேவை மையத்தின் 10ம் ஆண்டு திருமண சேவை மைய முப்பெரும் விழா நடந்தது.விழாவில் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தஞ்சை மாவட்ட தலைவர் தொழிலதிபர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி தாளாளர் நடராஜன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.நாகராஜன், கலியபெருமாள், முருகவேள் ஆகியோர் வரவேற்றனர். முனைவர் ராஜமாணிக்கம் கலந்துகொண்டு பேசினார். விழாவில் நகர தலைவர் மணி, துணைத்தலைவர் தொழிலதிபர் சேதுராமன், ஓய்வு பேராசிரியர் வீரபாண்டியன், ஒப்பிலியப்பன்கோவில் முன்னாள் அறங்காவலர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்குந்தர் திருமண சேவை மையத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ