மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ
19-Sep-2025
கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் மொபைல் ஃபோன் கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் சென்ற ன. இதையடுத்து கும்பகோணம் டி.எஸ்.பி., சிவபாஸ்கர் உத்தரவின் பேரில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் குற்றப்பிரிவு எஸ்.ஐ., கோவிந்தராஜ் மற்றும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.கும்பகோணம் ஆழ்வான் கோயில் தெருஅருகே சைக்கிளில் வாலிபர் செல்வதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கும்பகோணம் கொர நாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்த சாலமன்(25) என்றும் அவர் மொபைல்ஃபோன்கள் மற்றும் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.அவரிடம் விசாரணை செய்ததில் கும்பகோணம் மேலக்காவேரி பட்டக்கால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் வேல் முருகனிடம் மொபைல் ஃபோன், மேலக்கொட்டையூர் தோப்புத்தெரு தேவேந்திரனுக்கு சொந்தமான மொபைல்ஃபோன் மற்ரும் கொரநாட்டு கருப்பூர் சின்ன வீதியில் வசித்து வரும் துரை ராஜூக்கு சொந்தமான மூன்று மொபைல்ஃபோன்கள் ஆகிய வற்றை திருடியது தெரிய வந்தது. மேலும் சைக்கிள் திருடியது தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சாலமன் கொடுத்த தகவலின்பேரில் மொபைல்ஃபோன், சைக்கிள் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாலமனை நீதிமன்ற காவலுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025
19-Sep-2025