பைக் - லாரி விபத்தில் இருவர் உயிரிழப்பு
தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு அருகே பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சிவராமன், 29; இ - சேவை மையம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர், தன் உறவினரான ராஜசேகரன் மகன் அறிவுக்கரசு, 11, என்பவருடன், நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் பொருட்களை வாங்கிக்கொண்டு, அரசு மருத்துவமனை எதிரில் டூ - வீலரில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, சாலையின் மறுபுறத்தில், துவரங்குறிச்சியில் இருந்து வந்த லாரியின் பக்கவாட்டில் டூ - வீலர் மோதியது. இதில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, சிவராமன், அறிவுக்கரசு இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பேராவூரணி போலீசார் வழக்குப்பதிந்து, ராமநாதபுரம் மாவட்டம், கீழசிறுபூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் கண்ணன், 23, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.