உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பாலத்தில் டூ - வீலர்  மோதி டிரைவர் பலி

பாலத்தில் டூ - வீலர்  மோதி டிரைவர் பலி

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே நாடாகாடு பகுதியை சேர்ந்த சீனிவாசன், 45, பேராவூரணி அரசு போக்குவரத்து பணிமனை டிரைவர். திருச்சி துறையூரை சேர்ந்த இவர் நாடாகாடு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்தார்.சென்னை செல்லும் தன் மனைவி, மகளை பட்டுக்கோட்டையில் பஸ் ஏற்றி வழி அனுப்பிவிட்டு, நேற்று முன்தினம் இரவு, டூ - வீலரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வளைவில் திரும்பிய போது, டூ - வீலர் பாலத்தில் மோதியது. இதில், சீனிவாசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை