உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / 237 கிலோ கஞ்சா கடத்திய இரு இளைஞர்கள் சிக்கினர்

237 கிலோ கஞ்சா கடத்திய இரு இளைஞர்கள் சிக்கினர்

பட்டுக்கோட்டை:இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டு வந்த, 237 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கட்டையங்காடு கிராமத்தில், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் திருச்சிற்றம்பலம் போலீசார், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 'ரெனால்ட் டிரைபர்' காரை சோதனை செய்த போது, காரில் ஏழு மூட்டைகளில், 237 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். காரில் இருந்த துாத்துக்குடி மாவட்டம், ஜோதிங்கநல்லுாரை சேர்ந்த சீனிவாச பெருமாள், 26, திருநெல்வேலி மாவட்டம், திருமலைகொழுந்தபுரம் முத்துமாலை, 21, ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது, சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் கஞ்சா மூட்டைகளை கொடுத்து, கட்டையங்காடு பகுதியில் உள்ள ஒருவரிடம் கொடுத்து, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தனர். திருச்சிற்றம்பலம் போலீசார், இருவரையும் கைது செய்து, கார் மற்றும் 237 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி