உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பேரூராட்சி சேர்மனை கொல்ல முயற்சி ஆபீசில் வெடிகுண்டு வீசியவர்கள் யார்?

பேரூராட்சி சேர்மனை கொல்ல முயற்சி ஆபீசில் வெடிகுண்டு வீசியவர்கள் யார்?

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே பா.ம.க., சேர்மனை குண்டு வீசி கொல்ல முயன்ற கும்பல், போலீசார் விரட்டியதால், விழுப்புரம் அருகே காரை விட்டு தப்பியோடியது. தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையை சேர்ந்தவர் ஸ்டாலின். பா.ம.க., தஞ்சை மாவட்ட செயலரான இவர், ஆடுதுறை பேரூராட்சி தலைவராக உள்ளார். நேற்று முன்தினம், பேரூராட்சி அலுவலக அறையில், நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த எட்டு பேர் கும்பல், அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டுகளை வீசி, ஸ்டாலினை கொல்ல முயன்றது. தடுக்க முயன்ற, சேர்மனின் கார் டிரைவர்களான இளையராஜா, அருண்குமார் ஆகியோரையும் அந்த மர்ம நபர்கள் வெட்டியதால் படுகாயமடைந்தனர். டிரைவர் அருண்குமார் புகாரின்படி, திருவிடைமருதுார் போலீசார், தப்பிய மர்ம கும்பலை தேடினர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், ராகவன்பேட்டை சாலையோரத்தில் நின்றிருந்த, மர்ம நபர்கள் பயன்படுத்திய காரை, வடலுார் போலீசார், நேற்று காலை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், சம்பவம் குறித்து லாலி மணிகண்டன் என்பவரின் சகோதரரும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பில் உள்ளவருமான மகேஷ் என்பவரை, போலீசார் விசாரிக்கின்றனர். பாராட்டு விழா ரத்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் 87வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தலைமையில், நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை