ஆற்றில் மூழ்கி மாணவர் பலி முதியவரை மீட்ட பெண்கள்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார், 23. இவர், அரியலுார் மாவட்டம், குமுளூரில் அரசு கலைக்கல்லுாரியில் எம்.காம்., முதலாம் ஆண்டு படித்தார்.நேற்று முன்தினம், தஞ்சாவூர் மாவட்டம், செல்லப்பன்பேட்டையில் தன் பெரியப்பா ஆசைதம்பி, 65, வீட்டிற்கு சென்றார். அப்போது, ஆசைத்தம்பி, விஷ்ணுகுமார் இருவரும் வயலுக்கு சென்று விட்டு, கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்தனர்.நீரின் வேகத்தில், இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். ஆசைதம்பியை அங்கிருந்த பெண்கள் சேலையை வீசி காப்பற்றினர். தீயணைப்பு துறையினர் நேற்று காலை தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில், கரை ஒதுங்கி கிடந்த விஷ்ணுகுமார் உடலை மீட்டனர். கிழக்கு அளவி போலீசார் விசாரிக்கின்றனர்.