12 பவுன் தங்க நகை திருட்டு
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து மனைவி பராசக்தி 40. செப்.6 ல் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பி செயின், மோதிரம் உட்பட ரூ. 6 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்க நகைகளை பீரோவில் வைத்தார். செப்.12ல் நகைகளை பார்த்தபோது திருடு போனது தெரிந்தது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-