உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்

ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்

சின்னமனூர் : சின்னமனூரில் 4 ஆட்டோ சங்கங்களில் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. மார்க்கையன்கோட்டை, குச்சனூர், கன்னிசேர்வை பட்டி, எரசை, சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து வரும் ஆட்டோக்கள் ஆட்களை இறக்கி விட்டு, சின்னமனூரிலிருந்து ஆட்களை ஏற்றி செல்கின்றனர்.இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சின்னமனுாரில் நேற்று முழுவதும் ஆட்டோக்கள் இயங்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ