லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருப்பணி ஆலோசனை
சின்னமனூர் : சின்னமனூர் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருப்பணிகள் செய்வது குறித்து ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,தலைமையில் உபயதாரர்கள் கூட்டம் நடைபெற்றது.லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது. இங்கு நின்ற கோலத்தில் பெருமாள் ஆசி வழங்குகிறார். பெருமாளின் காலுக்கடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனிச்சிறப்பாகும். இக் கோயில் கும்பாபிஷேகம் 2005 ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். 19 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்ய ஹிந்து அறநிலைய துறை முடிவு செய்துள்ளது.ஏற்கெனவே கடந்தாண்டு நவ. 20 ல் பாலாலயம் நடைபெற்றது. ஜன.. 19 ல் முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் திருப்பணிகள் செய்யும் உபயதாரர்கள் கூட்டம் நடந்தது.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் அய்யம்மாள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயப் பாண்டியன், முருகேசன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் நதியா வரவேற்றார். இந்த கூட்டத்தில் திருப்பணிகள் செய்யும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.செயல் அலுவலர் நதியா கூறுகையில், உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உபயதாரர்கள் பலர் திருப்பணி செய்ய சம்மதம் தெரிவித்தும் கும்பாபிஷே செலவுகள், யாகசாலை அமைத்தல் போன்றவற்றிற்கும் உபயதாரர்கள் முன்வந்துள்ளனர் என்றார்.