உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தபால் பெட்டி திறக்கும் நேரம் இல்லை

தபால் பெட்டி திறக்கும் நேரம் இல்லை

பெரியகுளம், : பெரியகுளம் சுதந்திர வீதி தபால் அலுவலக தபால்பெட்டியில் தினமும் பலரும் தபால் அனுப்புகின்றனர். இப் பெட்டியில் எத்தனை மணிக்கு தபால் எடுக்கப்படும் என்ற நேரம் குறிப்பிடாமல் உள்ளது. இதனால் தபால் அனுப்புபவர்கள் தங்களது தபால் உரிய நேரத்திற்கு சென்று சேருமா என சந்தேகப்படுகின்றனர். தபால் பெட்டி திறக்கப்படும் நேரம் குறித்து அலுவலகப் பணியாளரிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. இதனால் பலரும் தலைமை தபால் அலுவலகம் சென்று தபால் பெட்டியில் போடுகின்றனர். சிலர் கூரியருக்கு செல்கின்றனர். தபால் பெட்டி திறக்கப்படும் நேரம் குறிப்பிட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ