உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேரூராட்சி தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பேரூராட்சி தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கம்பம் : காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி தலைவர், செயல் அலுவலருடன் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இப் பேரூராட்சி தலைவராக வேல்முருகன் (தி.மு..க.) உள்ளார். நேற்று காலை அலுவலகத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது. அப்போது 8 மற்றும்9 வது வார்டுகளை சேர்ந்த பெண்கள் கூட்டமாக வந்து தங்களது வார்டுகளில் கழிப்பறை வசதி, சாக்கடை வசதி செய்யவில்லை, ஆழ்துளை குழாய்,குடிநீர் தொட்டி அமைத்தும் தண்ணீர் சப்ளை வழங்கவில்லை என்றும் கூறி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த செயல் அலுவலர் பஷீருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன் என்றும், விரைவில் உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தலைவர் மற்றும் செயல் அலுவலரின் உறுதிமொழியை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை