உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி வளாகத்தை கிரீன் கவர் வளாகமாக மாற்ற இங்குள்ள தாவரவியல் துறை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் ஆரிபா பானு, உதவி பேராசிரியர் ரஷிதாபானு ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறார்கள். ஏற்கெனவே கல்லூரி வளாகத்தில் அனைத்து மூலிகை செடிகள் கொண்ட 'ஹெர்பல் கார்டன்' உருவாக்கி பராமரிக்கப்படுகிறது. அந்த கார்டனில் வன் மஹோத்சவத்தை கொண்டாடும் விதமாக நன்செய் அறக்கட்டளையுடன் இணைந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். வன் மஹோத்துவா என்பது மரங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை காப்பாற்றுவதற்காக நடத்தப்படுகிறது. மரம் நடும் நம்பிக்கை என்ற பொருளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கல்லூரி முதல்வர் எச். முகமது மீரான், பேராசிரியர் முகமது சமீம் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து மாணவ மாணவிகளும் மரக்கன்றுகளை நட்டனர். கல்லுாரி வளாகத்தை கிரீன் கவர் வளாகமாக மாற்ற முயற்சித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி