மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிேஷகம்
23-Aug-2024
எஸ்.ஐ., யை வெட்ட முயன்ற ரவுடிகள் நால்வர் கைது
20-Aug-2024
பெரியகுளம் சப் -டிவிஷனில் தென்கரை, வடகரை, தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்களாகவும், ஜெயமங்கலம் எஸ்.ஐ., தகுதியிலான ஸ்டேஷனாக உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் ஜெயமங்கலம், மேல்மங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, கோயில்புரம், குள்ளப்புரம், ஏ வாடிப்பட்டி, ஏ.வேலாயுதபுரம், ஏ.ரெங்கநாதபுரம், அழகர்நாயக்கன்பட்டி, வேல்நகர் உட்பட 15 கிராமங்களில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஸ்டேஷனை கட்டுப்பாட்டு பகுதியாக 15 கி.மீ., சுற்றளவு உள்ளது. இங்கு எஸ்.ஐ., பயிற்சி எஸ்.ஐ., மற்றும் 28 போலீசார்கள் உள்ளனர். ஒரு பெண் போலீஸ் கூட இல்லை. ஆண்டுக்கு சராசரியாக 650 வழக்குகள் பதிவாகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜெயமங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாதம்தோறும் ஏதாவது சமூக ரீதியான மோதல்கள் ஏற்படுகிறது. ஸ்டேஷன் எல்லை பரந்துவிரிந்த பகுதியாக உள்ளதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இதனால் குற்றங்கள், அசம்பாவித சம்பவங்கள் அதிகரிக்கிறது. மேலும் இரவில் போலீஸ் ரோந்து செல்வதில் தொய்வு நிலை உள்ளது.சில தினங்களுக்கு முன்பு ஜெயமங்கலம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., முத்துப்பெருமாளை அரிவாளால் வெட்ட முயற்சித்து நான்கு பேர் கைதாகினர்.இது மாதிரியான அசாதாரண சூழல் அவ்வப்போது உருவாகிறது.ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக தரம் உயர்த்த வேண்டும் என இப் பகுதி பொதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
23-Aug-2024
20-Aug-2024