உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தோட்டக்கலை திருவிழாவில் திருச்சி மகளிர் கல்லூரி முதலிடம்

தோட்டக்கலை திருவிழாவில் திருச்சி மகளிர் கல்லூரி முதலிடம்

--பெரியகுளம்: தோட்டக்கலை திருவிழாவில் திருச்சி மகளிர் தோட்டக்கை கல்லுாரி முதலிடம் பெற்றது.பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில அளவிலான அறிவுசார் திறனை மேம்படுத்தும் வகையில் தோட்டக்கலை திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.மாணவர் மன்ற ஆலோசகர் முத்தையா, நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி பேராசிரியர் மதளை சுந்தரம் முன்னிலை வகித்தனர். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் மாணவர்கள் உருவாக்கிய தொழில்நுட்ப நூலை வெளியிட்டு பேசுகையில்: மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்த நுட்பமான யுத்திகளை கையாளவேண்டும். இதன் முதல் வெற்றி பெறலாம். பொதுத்தேர்வுக்கு தயாராகும் போது எதை முன்னிலைப்படுத்த வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் மதிப்பெண் அதிகம் கிடைக்கும் என்றார்.இவ்விழாவில் 20 அறிவுசார் போட்டிகள் நடந்தது. மேலாண்மை இயக்குனர் சீனிவாசன், முருங்கை தொழில் மேம்பாடு நிறுவனர் சுஜாதா, மதுரை சமூக அறிவியல் கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் காஞ்சனா, தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய செயல் அலுவலர் வசந்தன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பையினை வழங்கினார். இதில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி முதலிடமும், கோவை தோட்டக்கலை கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தனர். மாணவர் மன்ற இணை ஆலோசகர் செண்பகவள்ளி நன்றி கூறினார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை