உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தட்டச்சு தேர்வில் 1495 பேர் பங்கேற்பு

தட்டச்சு தேர்வில் 1495 பேர் பங்கேற்பு

தேனி: தேனி கோட்டூர், தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக்குகளில் இருநாட்கள் நடந்த தட்டச்சு தேர்வில் 1495 பேர் பங்கேற்றனர்.தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாநில அளவில் நேற்று முன்தினம், நேற்று இளநிலைக்கு முந்திய நிலை, இளநிலை, முதுநிலை தேர்வுகள் தமிழ், ஆங்கில வழியில் நடந்தது. தேனி மாவட்டத்தில் கோட்டூர் அரசு பாலிடெக்னிக், தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக், பெரியகுளம் தங்கமுத்து பாலிடெக்னிக், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுாரிகளில் நடந்தது. கோட்டூர் அரசு பாலிடெக்னிக்கில் இருநாட்கள் நடந்த தட்டச்சு தேர்வில் 754 பேர் எழுத அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் 20 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வில் 734 பேர் பங்கேற்றனர். தேர்வு ஏற்பாடுகளை பாலிடெக்னிக் முதல்வர் சரவணன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் 810 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தேர்வில் 761 பேர் பங்கேற்றனர், 39 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். ஏற்பாடுகளை விரிவுரையாளர் ரஸ்வந்த் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ