உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அறிவுரை கூறியவரை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை

அறிவுரை கூறியவரை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி : தேனியில் அறிவுரை கூறிய விவசாயி அம்மாவாசியை அரிவாளால் வெட்டிய மொக்கயைனுக்கு 67, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆண்டிப்பட்டி ராஜாதானி விவசாயி அம்மாவாசி 59. அதே பகுதியை சேர்ந்த மொக்கையன் தினமும் குடித்து விட்டு தெருவில் செல்வோருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனை அம்மாவாசி கண்டித்து, அறிவுரை கூறினார். இதனால் மொக்கைசாமி ஆத்திரமடைந்து, அம்மாவாசிக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இந்நிலையில் 2022 பிப்.,ல் வீட்டருகில் நின்றிருந்த அம்மாவாசியை மொக்கயைன் அரிவாளால் வெட்டினார். இச்சம்பவம் தொடர்பாக அம்மாவாசி மகன் பிரகாஷ் ராஜாதானி போலீசார் புகார் அளித்தார். வழக்கு விசாரனை தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி மொக்கையனுக்கு, நீதிபதி கவிதா, 4 ஆண்டுகள் சிறை, 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu.
ஆக 31, 2024 07:58

நீதிபதியின் தீர்ப்பிற்கு சிரிப்புதான் வருகிறது. அரிவாளால் வெட்டியதற்கு 4ஆண்டுகள் தான் சிறை தண்டனை. இந்த காலத்தில் ₹ 2000 என்பது பிஸ்கோத்து. பிச்சைக்காரன் கூட ₹50,000 அபராதம் கட்டுவார் கடும் தண்டனை கொடுக்க வேண்டும். 20 ஆண்டுகள் கடுங்காவல்,₹500000 அபராதம் விதிக்க வேண்டும். சட்டத்தைப்பார்த்து பயம் வர வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை