உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்

பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் 16 கடைகள் கொண்ட வணிக வளாகம் பணிகள் முடிந்து பல மாதமாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டிக்கிடக்கிறது.ஆண்டிபட்டி பேரூராட்சி விரிவாக்கத்தில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் இரு ஆண்டுகளுக்கு முன் 16 கடைகள் கொண்ட வணிக வளாக கட்டுமான பணிகள் தொடங்கியது. தற்போது பணிகள் முடிந்து பல மாதமாகியும் அதனை இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: கடைகளுக்கான பணிகள் முடிந்து விட்டது. ஒப்பந்ததார் மூலம் கட்டடம் முடிவு பெற்றதற்கான இறுதிச் சான்று இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதமாகிறது. கடைகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !