மேலும் செய்திகள்
வரதட்சணை புகாரில் கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
1 hour(s) ago
தேனியில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
1 hour(s) ago
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்
1 hour(s) ago
போடி : 'தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பை நம்புவதாக ', அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி தெரிவித்தார்.போடியில் சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்ட அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி அளித்த பேட்டியில்: பிரசாரத்திற்கு போகும் இடம் எல்லாம் அ.தி.மு.க., விற்கு வரவேற்பு உள்ளது. குறிப்பாக பெண்களிடம் மிகுந்த எழுச்சி உள்ளது. இரட்டை விரலை காட்டி ஆதரவு அளித்து வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம், கர்ப்பிணிகளுக்கு உதவி திட்டம் தி.மு.க., அரசில் நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் அத்திட்டம் செயல்படுத்த 2026 பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என மக்கள் கூறுகின்றனர். தி.மு.க., கூட்டணியை விட அ.தி.மு.க., வலுவான கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். கடந்த முறையை காட்டிலும் இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும். போடி தொகுதி அ.தி.மு.க., வின் இரட்டை இலை கோட்டை. தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும் என அரசியல் வியூகம் வகுப்பதில் சிறந்தவரான பிரசாத் கிஷோர் கணித்துள்ளார். அவரது சர்வேயில் மாற்றம் இருக்காது. அதை நாங்கள் நம்புகிறோம். தேனி தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என்றார்.உடன் முன்னாள் எம்.பி., பார்த்திபன், போடி வடக்கு நகர செயலாளர் சேதுராம், தெற்கு நகர செயலாளர் மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் இருந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago