ஒருங்கிணைந்த உர மேலாண்மையை பின்பற்ற வேளாண் துறை அறிவுரை
தேனி: 'விவசாயிகள் ரசாயன உரங்களை மட்டும் பயன்படுத்தாமல், ஒருங்கிணைந்த உரமேலாண்மை முறைகளை பின்பற்றி மகசூல் அதிகம் பெறலாம்.'என,இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் நெல் 5867 எக்டேர், பயறு வகைகள் 1613 எக்டேர், சிறுதானியங்கள் 1323 எக்டேர், எண்ணெய் வித்துக்கள் 567 எக்டேர், கரும்பு 2010 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மண் எடுத்து பரிசோதனை செய்து, முடிவின் அடிப்படையில் பயிருக்கு ஏற்றாற்போல் உரங்கள் இட வேண்டும்.இதனால் அதிக அளவிலான உரப்பயன்பாடு தவிர்க்கப்படும். விதை நேர்த்தி செய்வதன் மூலம் முளைப்பு திறன் மேம்படும்.உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ரசாயன உர பயன்பாட்டை 25 சதவீதம் வரை குறைக்கலாம். பசுந்தாள் உரங்கள் பயிரிடுவதால் பல்வேறு நன்மைகள் பயிர்களுக்கு கிடைக்கின்றன. டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் வித்து பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்.மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா 1718 டன், டி.ஏ.பி., 475 டன், பொட்டாஷ் 406 டன், காம்ளக்ஸ் உரங்கள் 4495 டன், சூப்பர் பாஸ்பேட் 406 டன் உரங்கள் கூட்டுறவு, தனியார்உர விற்பனை நிலையங்களில் கையிருப்பு உள்ளன., என்றார்.