உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்பு

தேனியில் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்பு

தேனி: தேனியில் இன்று (மார்ச் 2) மாலை 6:00 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார்.தேனி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பெரியகுளம் ரோடு மதுராபுரி விலக்கு அருகே கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடைராமர் தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார்.கூட்ட ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடைராமர், மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், சீனிவாசன், விஸ்வநாதன், செல்லுார் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா செய்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்கள் வாகனங்கள் நிறுத்த 3 இடங்களில் பார்க்கிங், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அ.தி.மு.க., செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பிரமாண்டமாக இதை நடத்தவும், அதில் 50ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் 10 நாட்களாக நிர்வாகிகள் களமிறங்கி பணிபுரிவதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

போக்குவரத்து மாற்றம்

கூட்டத்தையொட்டி பெரியகுளம் -தேனி பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. திண்டுக்கல் -குமுளி பைப்பாஸ் ரோட்டில் வரும் வாகனங்கள் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் வழியாக வைகை அணை க.விலக்கு வழியாக தேனி செல்ல வேண்டும். மறுமார்க்கத்தில் வரும் வாகனங்கள் இதே வழித்தடத்தில் செல்லலாம். போலீஸ் மூலம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும் என மாவட்ட போலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை