ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் துவக்க விழா
தேனி : ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் இந்தியாவில் முன்னணி கருத்தரிப்பு மையம் ஆகும். நேற்று அதன் 53வது கிளை தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம் ரோட்டில் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய நிறுவனர் டாக்டர் சந்திரலேகா தலைமை வகித்தார். விழாவில் இந்திய மருத்துவ சங்க தேனி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜ்குமார், செயலாளர் டாக்டர் ரவி, பொருளாளர் டாக்டர் சுகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிறுவன தலைமை செயல் அதிகாரி டாக்டர் செந்தில்குமார் பேசினர். விழாவில் டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடக்கவிழாவை முன்னிட்டு இன்று(செப்.,15) வரை அனைத்து தம்பதியினருக்கும் இலவச கருத்தரிப்பு ஆலோசனை, இலவச ஸ்கேன் சேவை வழங்கப்பட உள்ளது. மேலும் ஐ.யூ.ஐ., மற்றும் ஐ.வி.எப்., சிகிச்சைகள், ரத்த பரிசோதனைகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் மூலம் பலனடைந்த தம்பதியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.