சாதனை மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா
கூடலுார்: தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தலைவர் சரவணன் தலைமையில், ஆசிரியர் முருகன் வரவேற்றார்.எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பள்ளிக்கு எம்.பி.,தொகுதி நிதியில் இருந்து கலையரங்கம், மைதானத்தில் இருக்கை வசதி செய்து தருவதாக உறுதியளித்தார். தலைமை ஆசிரியர் முனியசாமி, பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் பாண்டியராஜன், நிர்வாகிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.