உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோர் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

ஆட்டோர் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

தேனி : சில்லமரத்துப்பட்டி கஸ்துாரிபாய் தெரு ஆட்டோ டிரைவர் ராஜேஷ்குமார் 38. திருமணம் ஆக வில்லை. இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள விடுதியில் ஆறு மாதங்களாக தங்கினார். நேற்று விடுதியின் காப்பாளர் ராமராஜன் அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., மணிமாறன் தலைமையிலான போலீசார் அறை கதவை உடைத்து பார்த்த போது, ராஜேஷ்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தேனி மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி விசாரிக்கின்றனர். எஸ்.ஐ., கூறுகையில், விசாரணையில் சாஸ்திரதிற்காக வீட்டில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறி விடுதியில் தங்கியுள்ளார். தற்கொலை செய்து 3 நாட்கள் மேல் ஆகியிருக்கலாம்', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை