மேலும் செய்திகள்
உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு
25-Aug-2024
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அய்யனார்புரம் அருகே உள்ள அய்யனார் கோயிலில் நேற்று முன் தினம் இரவில் கதவின் பூட்டு, உண்டியலை உடைத்து பணத்தை யாரோ திருடி சென்று விட்டனர். கோயில் அருகே இருந்த இரு கடைகளையும் உடைத்து பொருட்களை திருடி சென்று விட்டனர். கோயில் பூஜாரி முருகன் புகாரில் போலீசார் திருடியவர்களை தேடி வருகின்றனர்.
25-Aug-2024