உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருத்துவமனை கட்ட முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களுக்கு அழைப்பு

மருத்துவமனை கட்ட முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களுக்கு அழைப்பு

தேனி: மதுரையில் மருத்துவமனை துவங்க முதலீடு செய்ய பணம் கொடுத்து ஏமாந்த தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சங்கர் தெரிவித்துள்ளார்.அவர் கூறி உள்ளதாவது: விருதுநகர் அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியை சேர்ந்த டாக்டர் பூர்ணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரை சிந்தாமணியில் மருத்துவமனை கட்டி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் 36 சதவீத வட்டி தருவதாகவும், முதலீட்டாளர்கள் குடும்பத்தினருக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணம் முதலீடு செய்து ஏமாந்தனர். அருப்புக்கோட்டை பானுமதி உள்ளிட்டோரின் புகாரில் டாக்டர் பூர்ணசந்திரன் உட்பட 5 பேர் மீது 2023ல் வழக்கு பதியப்பட்டது.இவர்களிடம் பணம் செலுத்தி கிடைக்காதவர்கள் மதுரை தபால்தந்தி நகர் விரிவாக்க பகுதியில் சங்கரபாண்டியன் நகரில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ